திங்கள், 3 மார்ச், 2014

தோழர்களே!  தோழியர்களே

         இன்று  மாவட்டம் முழுவதும் ஓர் துண்டறிக்கை வெளிவந்துள்ளது
        அதற்கு இதோ எங்களின் பதிலுரை .

 கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட தலைவர் என்று கூறிக்கொள்ளும்  தோழர் M.S .குமார் அவர்களே TMTCLU மாவட்டத்தலைவர் என்று கூறிக்கொள்ள உமக்கு என்ன தகுதியுள்ளது (செயல்படாத   மாவட்டத்தலைவர்)

 நீர் யாரை மாநில தலைவர்  /பொதுசெயலர் என்று கூறுகிறீர்களோ  அவர்கள் இச்சங்கதுக்கும் உறுப்பினர்களுக்கும் செய்தது என்ன?

 இவர்கள் குறைந்தபட்ச கூலி ,EPF ,ESI போன்ற பிரச்சினைகளை தீர்க்க என்னசெய்தார்கள்?
சங்கத்தை புதுபிக்கத்தவறியவர்கள் தான் இவர்கள்
அதுசரி கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் எத்தனை மாநாடுகள் நடத்தினார்கள்?

 நீங்கள் பெருமை கூரும் கும்பகோணத்தில் இன்று TMTCLU என்ற சங்கம் உள்ளதா ?
 கடந்த APRIL-2013 முதல் தொடர்ந்து *80* நாட்களுக்கும் மேலாக 30 நாட்கள் ஊதியம் கேட்டுப்போராடிய தோழர்களுக்கு இவர்கள் பெற்று தந்தது என்ன?
( NFTE- -மாநில செயலரும்  இதில் கவனம் செலுத்தாதது ஏன்?)


இந்த சமயத்தில் தான் கடலூரில் இருந்து ஒரு ஆழிப்பேரலை (TSUNAMI) உருவாகி சென்னையை நோக்கி நீதிமன்றம் நோக்கி புறப்பட்டது

அவர்தான் எங்களின் அன்புத்தோழன்/தலைவன் தோழர்.ஆனந்தன்*
அவர் மட்டும் இப்பிரச்சினையை கையில் எடுக்கவில்லை என்றால் இன்று  நீங்களும் /நாங்களும் 30* நாட்கள் ஊதியம் பெறமாட்டோம்

மேலும் மாநிலத்தில் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் தான் 8.33% போனஸ் பெற்றோம் இதற்கும் தோழர் ஆனந்தனின் முயற்சியே காரணம்

இன்று மாவட்டத்தில் அனைத்து தோழர்களும் நிறைவான ஊதியம் பெறுகின்றோம் என்றால்  உம்மையும்      சேர்த்து அதற்கும் ஆனந்தனே காரணம்

எனவேதான் ஆனந்தனின் சேவை கடலூரோடு நின்றுவிடாமல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தோழர்களுக்கும்    தேவையென்பதாலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓர் அகில இந்திய சங்கம் தேவை என்பதாலும் எங்களின்  அடுத்த               *ஜெகன் தோழர் CKM* அவர்களின் வழிகாட்டலோடு *NFTCL* தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்  உருவாக்கப்பட்டு   எங்கள் தலைவன்* தோழர். S.ஆனந்தன்* அவர்கள் தமிழ் மாநிலத்தின் செயலராக பலத்த  கர ஒலிகிடையே  (10 நிமிடம் ) தேர்வு செய்யப்பட்டார். எங்கள் தலைவன் ஓர் செயல் படக்கூடிய  மாநிலசெயலராக இருப்பார்.


 *120+VDA  பெற்று தந்தது மாநிலசங்கமா மனசாட்சியோடு சொல்லுங்கள் தோழர் MS.குமார் அவர்களே
 கடந்த மாதம் 20-ஆம்  தேதி வரை ஊதியம் வரவில்லை உமது தலைவர் 20-ஆம் தேதி நிர்வாகத்திடம் முறையிட்டார் என்று கூறுகிறீர்கள்
அதுவரை பேச மனமில்லையோ

 *திக்குதெரியாத காட்டில் நின்றுகொண்டு  விழிப்பிதுங்கி உளறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!!

                                                          தோழமையுடன்

  P.தமிழ்ச்செல்வன்     S.பன்னீர்செல்வம்         K.சௌந்தரராஜன்
  M.அண்ணாமலை         R.சங்கர்   S.பாஸ்கர்  P.பாண்டியன்

                                                     நெய்வேலி கிளை 

  கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக