வெள்ளி, 11 ஏப்ரல், 2014

காரைக்குடி வெப்சைட்டிலிருந்து

காரைக்குடி RSU  தொலைபேசி நிலையத்தில்
 காவலராகப் பணிபுரிந்த 

தோழர்.ஆரோக்கியசாமி

10/04/2014 அன்று உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். 

காலையில் பணி முடித்தார்.. 
மாலையில் காலன் அவர்தம் உயிர் முடித்தான். 
ஏறத்தாழ 15 ஆண்டுகள் காவலராக ஒப்பந்த முறையில் பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணி புரிந்தார். ஒப்பந்த ஊழியராக வாழ்ந்து உயிர் நீத்ததனால் ஒரு பலனும் அவரது  குடும்பத்தாருக்கு கிட்டாது. 

அவரது இறப்பை விட இதுவே பெருங்கொடுமை

"ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 
அமுல்படுத்தப்பட வேண்டும்" 

என்பது காரைக்குடி சிறப்பு 

மாநாட்டுத்தீர்மானம். 

அது நிறைவேற்றப்படும் அன்றுதான் 

தோழர்.ஆரோக்கியசாமியின் 

ஆன்மா அமைதியடையும் . 


காரைக்குடியில் நேற்று 10-04-2014 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த தோழர்: ஆரோக்கியசாமி  அவர்களின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


15 ஆண்டுகள்  பணிபுரிந்த தோழருக்கு எந்த பலனும் இல்லை என்றும்.ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆயுள் காப்பிட்டுத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது காரைக்குடி சிற(ரி)ப்பு மாநாட்டின் தீர்மானமாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாரை தலைவர்/பொதுசெயலர் என்று கூறுகிறார்களோ அவர்கள் இத்தனை ஆண்டு காலம் குறட்டை விட்டு கும்பகர்ண தூக்கம் போட்டது ஏன் ?                                                     (இன்னமுமா இந்த ஊர் நம்மள நம்புது )
             
சிறப்பு மாநாட்டின் அம்சம் என்ன?தொழிசங்கத்தின் பெயரே தெரியாதவர்கள் நடத்தியதுதான் மாநாடு 
TMTCLU என்பதன் அர்த்தம் என்ன. தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்பதே அதன் பொருள்.ஆனால் இவர்கள் கூறுவதோ தமிழக தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்று.இதில் TMTCLU எங்கே வருகிறது .(TNTCLU )
   TMTCLU என்ற அமைப்பை முறையாக செயல்படுத்தி அச்சங்கத்தை கட்டிக்காத்த பெருமை கடலூர் மாவட்டத்திற்கும் குறிப்பாக எங்கள் தோழன் S.ஆனந்தன்  அவர்களுக்குமே சாரும் . 
 காரைக்குடி மாநாட்டின் தீர்மானம் அனைத்தும் எங்கள் தோழன் ஆனந்தன் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்னரே கடலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு தெரியபடுத்த விரும்புகின்றோம்.கடந்த 01-10-2009 அன்று முதன் முதலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.90  ஊதியம் கிடைக்க வழிவகுத்தார் (அதற்க்கு முன் ரூ.53 மட்டுமே பெற்றோம்)பின்பு அசுரவேகம் காட்டி மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி மற்றும் VDA,     EPF ,     ESI    போன்ற அனைத்து சலுகைகளும் பெற்றுதந்துள்ளார்.                              ( மாநில சங்ககளின் உதவி இல்லாமல் )
 இன்று பலர் ESI  கார்டை பயன்படுத்தி மருத்துவ வசதி பெறுகின்றோம் என்றால் அதற்கும் ஆனந்தனே காரணம் .  ஆனந்தன் போராடிப்பெற்று  தந்த ESI  திட்டத்தின் பயனாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெய்வேலி தோழர் ஆறுமுகம் என்பவர் உயிழிழந்தார்.  மாற்று சங்க தோழர் என்றும் பாராமல் அவரின் ஈமச்சடங்கிற்கு ரூ.5000 பெற்றுக்கொடுத்து குடும்பத்திற்கு  இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் பெற்றதும் EPF திட்டத்தின் பயனாக குடும்ப பென்சன் பெற்றதும் அத்தோழரின் துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிப்பெற்று தந்தது , விருத்தாசலம் A/C OPPERATOR  தோழர் மணி  அவர்கள் மரணமடைந்த  போது அவரது குடும்பத்திற்கு நிவாரணம் ரூ.25000 (DGM கொடுத்த ரூ.500-ம் சேர்த்து) மற்றும் அவரது துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிபெற்றது.தீவிபத்தில் பதிக்கப்பட்ட தோழர் காளியப்பன் மற்றும் தோழியர் 
செல்வி  குடும்பத்திற்கு  வீடு கட்ட ரூ .30000 வழங்கியது   
கடலூர் தோழியர் வள்ளி சிறுநீரக ஆப்பரேசன் பைசா செலவின்றி செய்தது.தோழர் ராஜேஷ் அவர்கள் பாண்டி அரவிந்தர் கண் மருத்துவமனையில் கண்சிகிச்சை செய்தது இப்படி பல வகையில் சங்கம் பாராமல், ஜாதி பார்க்காமல் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் அனைத்தும் பெற்று தந்துள்ளார்.
NFTCL மாநில செயலர் தோழர்: S.ஆனந்தன் அவர்கள்.
கடலூருக்கு மட்டுமல்ல BSNL தமிழ் நாட்டிற்கே பொதுவானவர் S.ஆனந்தன் 
இன்று தமிழத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 30 நாட்களுக்கும் ஊதியம் பெற்று தந்துள்ளார் 
காரைக்குடி தோழர்களே இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை காலம் கடந்து விடவில்லை தோழர் ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை உள்ளது.கடலூர் தோழர் ஆனந்தன் அவர்களை அணுகினால் அனைத்து உதவிகளும் செய்ய தயாராகவுள்ளார் கவுரவம் பார்க்காதீர்கள்  உங்களை நம்பியவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

                                                  இன்னும் பல தகவல்களுடன் 
                                                         P.தமிழ்ச்செல்வன் 
                                                   மாவட்ட உதவிச்செயலர் 
                                                   NFTCL -நெய்வேலி-கிளை        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக