செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா



பெர்த்,மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.மாயமான ‘மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370’ விமானத்தின் கதி, ஒரு மாதமாகியும் இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேரது குடும்பங்களும், தங்கள் குடும்ப உறுப்பினரின் கதி தெரியாமல் கலங்கிப்போய் உள்ளனர்.அந்த விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு நடுவானில் மாயமானபோது நடந்தது என்ன, விமானி அறையில் என்ன பேசப்பட்டது என்பதையெல்லாம் ஒலிப்பதிவு செய்துள்ள விமானத்தின் கறுப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதில் உள்ள பேட்டரி ஒரு மாத காலமே இயங்கும் என்பதால் அதன் ஆயுட்காலம் இன்று அல்லது நாளை முடிந்துவிடக்கூடும். எனவே அந்த கறுப்பு பெட்டியை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளுடன் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், அந்த விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனகப்பல் ‘ஹாய்ஸன் 01’, இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் இருந்து மாயமான விமானத்தினுடையது என கருதப்படுகிற கறுப்பு பெட்டி சிக்னலை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முறையும், சனிக்கிழமை ஒரு முறையும் அந்த சிக்னலை (ஒலி சமிக்ஞை) கேட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரெலிய விமானம் சிக்னலை கண்டறிந்துள்ளது என்று ஆஸ்திரேலியா அதிகாரி தெரிவித்துள்ளார். இது மேலும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலியாவின் தேடுதல் பணி அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடல்பகுதியில் இரண்டு சிக்னல்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை மார்ஷெல் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.முதல் சிக்னல் பெற்றதை அடுத்து 13 நிமிடங்கள் கழித்து மீண்டும் சிக்னல் பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிக்னல்கள் கேட்டுகும் விதமாக இருந்தது. பெரும்பாலும் இது விமானத்தில் தரவு ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் பரிமாற்றங்கள் இசைவானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க கப்பல் ஆஸ்திரேலியாவிடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக