சனி, 3 மே, 2014

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேற்றம்

http://www.newindianews.com/photos/thumbs/2014/05/india_002.jpg
உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது.
உலக வங்கி சார்பில் சர்வேதச ஒப்பிட்டு திட்டம் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2வது இடத்தை சீனாவும் பெற்றுள்ளன, இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது
2005ம் ஆண்டில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, 2011ல் மிக வலிமையாக முன்னேறி இந்த இடத்தை பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.
இதற்கு முன்பு பொருளாதாரத்தில் வலிமையாக இருந்த ஜப்பான், இங்கிலாந்தை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
மேலும், பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகள் பழைய நிலையிலேயே தொடர்ந்து நிற்கின்றன என்றும் ஜெர்மனி ஓரளவு மட்டும் முன்னேறி உள்ளது எனவும் குறிப்பிடபட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக