செவ்வாய், 8 ஏப்ரல், 2014

என்று தனியும் இந்த மின்சாரதாகம்

நெல்லை. ஏப். 8–                          

கூடங்குளம் 2–வது அணுஉலையில் அடுத்த மாதம் வெப்பநீர் சோதனை ஓட்டம்

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணு உலைகள் அமைப்பதற்காக ரஷியாவுடன் இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தம் செய்ய இருந்தது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் பின்னடைவு ஏற்பட்டது.இதையடுத்து கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணுஉலைகள் அமைக்க ரஷியாவுடன் இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென மத்திய அரசு தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் அனுப்பியது. அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணுஉலைகள் அமைக்க நேற்று அனுமதி அளித்தது.இந்நிலையில் கூடங்குளத்தில் 1 மற்றும் 2–வது அணுஉலை பணிகள் குறித்து அணுமின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் இன்று கூறியதாவது:–கூடங்குளம் முதல் அணுஉலையில் 680 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. முதல் அணு உலையில் 880 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.2–வது அணு உலையில் மின்உற்பத்தி செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்தமாதம் வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக